நீரின்றி:
கரைபுரண்டோடிய ஆறுகளெல்லாம் நீரின்றி
காணாமல் போக-அதை நிரப்புகின்றன
கணக்கிலடங்கா மணல் லாரிகள்.
கதிர்கள் சுமந்த கழனிகளெல்லாம் நீரின்றி
காய்ந்து போக-அதை ஏற்கமறுத்து
கண்ணீரில் நனைக்கின்றனர் எம் விவசாயிகள்.
காட்டில் உள்ள மரங்களெல்லாம் நீரின்றி
காய்க்காமல் போக-அதை இடம்பெயர்ந்து தேடுகின்றன
கானாப்பறவைகளும்,ஆடும் விலங்குகளும்.
மரங்களும்,செடிகளும் மட்டுமில்லை
மனிதனும் கூட நாளை மாண்டுபோவான்
இனி நீரின்றி போனால்.
இருப்பதையெல்லாம் இங்கே தொலைத்துவிட்டு நீரின்றி
தேடித்திரிகின்றோம் வானின் மடியிலே.
மாற்றம் செய்வோம் சு.பிரபாகரன்
கரைபுரண்டோடிய ஆறுகளெல்லாம் நீரின்றி
காணாமல் போக-அதை நிரப்புகின்றன
கணக்கிலடங்கா மணல் லாரிகள்.
கதிர்கள் சுமந்த கழனிகளெல்லாம் நீரின்றி
காய்ந்து போக-அதை ஏற்கமறுத்து
கண்ணீரில் நனைக்கின்றனர் எம் விவசாயிகள்.
காட்டில் உள்ள மரங்களெல்லாம் நீரின்றி
காய்க்காமல் போக-அதை இடம்பெயர்ந்து தேடுகின்றன
கானாப்பறவைகளும்,ஆடும் விலங்குகளும்.
மரங்களும்,செடிகளும் மட்டுமில்லை
மனிதனும் கூட நாளை மாண்டுபோவான்
இனி நீரின்றி போனால்.
இருப்பதையெல்லாம் இங்கே தொலைத்துவிட்டு நீரின்றி
தேடித்திரிகின்றோம் வானின் மடியிலே.
மாற்றம் செய்வோம் சு.பிரபாகரன்
No comments:
Post a Comment